Saturday, January 2, 2010

வண்ணத்துப் பூச்சி

வண்ணத்துப் பூச்சி - சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கொள்ளை கொள்வது. எவ்வளவு சிறிய பூச்சிக்குள் இறைவன் எவ்வளவு அருமையான ஓவியங்களை வரைந்துள்ளான். நம்மில் பலருடைய பாலபருவமும், பல வண்ணங்களை உடைய வண்ணத்துப் பூச்சிகளைத் தொடர்வதிலே கழிந்தது.
வண்ணத்துப் பூச்சிகள் வசந்தத்தின் அறிகுறியாக கருதப்படுகின்றன. அதனாலையே அதனுடைய வருகை அனைவராலும் விரும்பப்படுகிறது. Butterflies are self propelled flowers. எவ்வளவு அருமையான வார்த்தைகள். நான் பல தடவை வியந்துள்ளேன், எல்லா நாட்டிற்கும் அதற்கென்று சின்னமாக தேசிய விலங்குகளும் , தேசிய பறவைகளும் உள்ளது போல ஏன் தேசிய வண்ணத்துப் பூச்சிகள் இல்லை? . அப்படி இருப்பதற்கு வண்ணத்துப் பூச்சிகளுக்கு எல்லா தகுதியும் உண்டு.

மெக்ஸிகோ நாட்டில் வண்ணத்துப் பூச்சிகளுக்கென்று 56,000 ஹெக்டேர் பரப்பளவில் ஒரு உயிரியல் பூங்கா உள்ளது. Monarch Butterfly Biosphere Reserve எனப்படும் அந்த உயிரியல் பூங்கா, UNESCO ஆல் உயிரியல் பண்பாட்டுச் சின்னமாக (Biosphere Reserve) அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 100 கோடி அளவிலான வண்ணத்துப் பூச்சிகள் வருடம் தோறும் கனடா மற்றும் அமெரிக்காவிலிருந்து இந்த உயிரியல் பூங்காவிற்கு வருகை தருகின்றன. அப்பொழுது எங்கு பார்த்தாலும் வண்ணத்துப் பூச்சிகளாக இருப்பதைப் பார்ப்பதே கண்கொள்ளக் காட்ச்சியாக இருக்கும்.

இவ்வாறு வரும் வண்ணத்துப் பூச்சிகள் தாங்கள் பிறந்த இடத்திற்க்கேத் திரும்பச் செல்கின்றன. அவ்வாறு செல்ல நான்கு தலைமுறை எடுக்கும். இப்படி அடுத்தடுத்தச் சந்ததியினர் எப்படி தங்கள் மூதாதையர் இடத்திற்க்கேச் செல்கின்றன என்பது எவராலும் விளக்க முடியாத மர்மமாக உள்ளது. Great Migration எனப்படும் ஆப்ரிக்காவில் நடைபெறும் 20 லட்சம் பாலூட்டிகளின் இடப்பெயர்ச்சிக்கு இணையானது வண்ணத்துப் பூச்சிகளின் இந்த இடப்பெயர்ச்சி.

If nothing ever changed, there'd be no butterflies. மாற்றங்கள் இல்லையேல் மகத்துவங்கள் இல்லை
. மாற்றங்களுக்கு மிகச் சிறந்த உதாரணம் வண்ணத்துப் பூச்சி .
புழுவாகப் பிறந்து பூச்சியாக மாறும் அதன் மாற்றம் அழகானது. எங்க அப்பா சேமித்து வைத்த தபால் தலைகளில் எனக்கு மிகவும் பிடித்தது வண்ணத்துப் பூச்சிகளைக் கொண்ட தபால் தலைகளே.

பல நாடுகளில் வண்ணத்துப் பூச்சிகளுக்கென்று தனியான அருங்காட்சியங்கள் உள்ளன. அந்த மூடிய அருங்காட்ச்சியங்களில் பல வண்ணப் பூக்கங்களும் வண்ணத்துப் பூச்சிகளும் இருக்கும். அந்த அருங்காட்ச்சியங்களில் நீங்கள் கைகளில் தேனைத் தடவிக் கொண்டு இருந்தால், அந்த வண்ணத்துப் பூச்சிகளே உங்கள் கைகளில் வந்து உட்காரும். அந்த அருங்காட்சியங்களில் இருக்கும் ஒரே நிபந்தனை நீங்கள் வண்ணத்துப் பூச்சிகளைத் தொடக்கூடாது. அதே போன்ற அருங்காட்சியகம் பெங்களூரில் அமைய இருப்பதாக கேள்விப்பட்டேன், அப்படி அமைந்தால் மிக ஆமையாக இருக்கும். ஆனால் எந்த ஒரு அருங்காட்சியங்களும் Monarch Butterfly Biosphere Reserve க்கு இணையாகாது.

1 comment:

Devaraj Rajagopalan said...

வண்ணத்து பூச்சியை பற்றி நீ எழுதி இருந்தது மிகவும் நன்றாக இருந்தது.
மாற்றங்கள் அதன் மகத்துவங்கள், மிகவும் அருமை.
ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் சின்னங்கள் இருக்கும் அதில் பறவை, மரம், பூ, விலங்கு, கீதம், மட்டுமே உள்ளதாக தெரிகிறது, அதில் பூச்சிகளும் இருந்தால் நிச்சயமாக வண்ணத்து பூச்சியை தான் பெரும்பாலான நாடுகள் தேர்ந்து எடுத்து இருக்கும்.